மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வீடியோ அழைப்பு மற்றும் மெசேஜிங் செயலியான ஸ்கைப் (Skype), வரும் மே 5, 2025 அன்று முழுமையாக சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2003ம் ஆண்டில் அறிமுகமாகி, கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்ட ஸ்கைப், கோவிட் பிந்தைய காலத்தில் Zoom, Google Meet, WhatsApp போன்ற செயலிகளால் மாற்றப்பட்டு மெதுவாக பின்னடைந்தது.

இதனையடுத்து, மைக்ரோசாஃப்ட் தற்போது அனைத்து தகவல் தொடர்பு சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் Microsoft Teams தளத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. Teams மூலம் வீடியோ அழைப்புகள், உரையாடல்கள், கோப்புகள் பகிர்வு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கைப் சேவையை இன்னும் பயன்படுத்தும் பயனாளர்கள் கவலைப்பட தேவையில்லை. காரணம், Skype கணக்கில் உள்ள அனைத்து தகவல்களும், Teams-இல் தொடர்ந்து பயன்படுத்த முடியும். உங்கள் Skype login ஐ பயன்படுத்தி Microsoft Teams-இல் உள்நுழையலாம். பழைய உரையாடல்கள், தொடர்புகள் மற்றும் செய்திகளும் Teams-இல் தொடரும்.

ஆனால், Skype மூலம் செய்யப்பட்ட உலகளாவிய அழைப்புகள் மற்றும் Skype எண்ணுகளுக்கான சந்தா சேவைகள் தற்போது புதிய பயனாளர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய பயனாளர்கள் மாதாந்திர சந்தா காலம் முடியும் வரை பயன்படுத்தலாம். Teams இல்லாமல் விருப்பம் இருந்தால், Zoom, Google Meet, WhatsApp போன்ற மாற்று செயலிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.