
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும் இந்த வருடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவையில் வசித்து வரும் தாய் மற்றும் மகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை ஒன்றாக எழுதி உள்ளனர். இதில் மகள் அனன்யா 5048 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் தாய் லாவண்யா ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில் 335 மதிப்பெண் எடுத்துள்ளார். அவர் பொருளாதாரம் பாடத்தில் 3 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் 32 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.