அமெரிக்க நாட்டில் அலாஸ்கா பகுதியின் வான் பரப்பில் ஒரு மர்ம பொருள் பறந்து கொண்டிருந்தது. இதனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த நான்காம் தேதி அமெரிக்க ராணுவம் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது. அதன்பின் இரண்டாவது முறையாக அமெரிக்க ராணுவம் இந்த மர்ம பலூனை சுற்றி வீழத்தி இருக்கிறது.

இது எங்கிருந்து வந்தது இதன் நோக்கம் என்ன என்பதெல்லாம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் 4000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த பலூன் விமான போக்குவரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கியது. இது சீன உளவு பலூனை போல அளவில் மிகப்பெரியது அல்ல. மேலும் இது அரசுக்கு சொந்தமானதா? அல்லது வேறு ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானதா? என்பது இன்னும் தெரிய வரவில்லை” என்று கூறியுள்ளார்.