அமெரிக்க நாட்டின் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். அப்போது லிப்டில் அவருடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஆங்கி தனது கைப்பையில் வைத்திருந்த சூடான காபியை எடுத்து இளைஞரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதனால் சூடு தாங்க முடியாமல் வலியில் அலறி துடித்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த தாக்குதலில் ஆங்கிக்கு லேசான சிராய்ப்புகளே ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஆங்கி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஹென்றிக் ஹாம்லின் என்ற 26  வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆங்கி கிரேக் கூறியதாவது “காலை நேரத்துக்கு காபியே என்னை காப்பாற்றி உள்ளது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். எனக்கு காயங்கள் எதுவும் அதிகமாக ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.