சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் செங்குன்றம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் அந்த பெண் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது முதல் கணவர் உயிரிழந்ததால் முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தேன்.

அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் முகமது பைசலை பிரிந்து தனியாக வாழ்கிறேன். என் மீதுள்ள கோபத்தில் முகமது பைசல் எனது புகைப்படத்தை கைப்பேசி என்னுடன் இணைத்து பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து சிலர் என்னை தொடர்பு கொண்டு பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது பைசலை கைது செய்தனர்.