உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை தூக்கிகொண்டு வெளியேறி இருக்கிறது. இதற்கிடையில் குழந்தை வலியில் அழுதுள்ளது. இதையடுத்து அழுகை சத்தம் கேட்டு விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வருவதற்குள், அந்த குரங்கு மேற்கூரை பகுதிக்கு சென்றுவிட்டது.

அதன்பின் குழந்தையை பாதுகாக்கும் முயற்சியாக குரங்கை பயமுறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் மேற் கூரைக்கு சென்ற அந்த குரங்கு திடீரென குழந்தையை கீழே எறிந்துள்ளது. இதனால் அந்த குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனே குழந்தையை மீட்டு திந்த்வாரி பகுதியிலுள்ள குடும்ப நல மையத்துக்கு சென்று உள்ளனர். எனினும் குழந்தை இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாகவும் இது போன்று குரங்குகள் கூட்டாக மக்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து வனதுறையினருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.