
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு பிரிபெய்ட் மலிவு திட்டங்களை ஜியோ நிறுவனம் சத்தமின்றி நீக்கி உள்ளது.
டிராய் உத்தரவு படியும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 296 ரூபாய் கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 25 ஜிபி டேட்டா அழித்தது. அதனைப் போலவே 259 ரூபாய் திட்டத்தில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த இரண்டு திட்டங்களும் நீக்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் 319 ரூபாய் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.