உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தில் ராஜுபால் என்ற 44 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்த நிலையில் இரண்டு மனைவிகளையும் பிரிந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆர்த்தி பால் என்ற 26 வயது இளம்பெண்ணை 3-வது முறையாக அவர் திருமணம் செய்தார்.

திருமணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நேற்று முன்தினமும் திடீரென கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் ராஜு தன் மனைவியை அடிக்க அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக ஆர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.