தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதுவரை விஜய் அவர்களை பார்த்திராத ஒரு கோணத்தில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் நேற்றைய தினம் அவரைக் கண்டனர். அதற்கு முன் வரை மிகவும் அமைதியான ஒரு நபராக தன்னை காட்டிக் கொண்ட விஜய் நேற்று மாநாட்டில் ஆக்ரோஷமாக அனல் பறக்க பேசியது அவரை ஒரு பக்காவான அரசியல்வாதியாக காட்டியிருந்தது. இதை பார்க்கையில், இத்தனை நாட்கள் லியோ படத்தில் வரும் பார்த்திபன் போல் இருந்துவிட்டு மாநாட்டில் திடீரென விஜய் அவர்கள் லியோ போல் மாறிவிட்டார் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

லியோ படத்தில் பார்த்திபன் என்ற கதாபாத்திரம் தனக்குள் இருக்கும் ஒரு பயங்கரமான குணநலன்களை மறைத்துக் கொண்டு தன்னை மிகவும் அன்பானவனாகவும் பண்பானவனாகவும் சுற்றி உள்ளவர்களிடம் அக்கறை காட்டும் ஒரு நபராகவும் மிகவும் பணிவாக குரல் உயர்த்தி பேசாத ஒரு ஆளாகவும் காட்டிக்கொண்டு வாழ்ந்து வருவார்.

ஆனால் அவரது கடந்த கால வாழ்க்கையில் அவர் அப்படி அல்ல ஒரு கட்டத்திற்கு மேல் அவருடைய அந்த பயங்கரமான அரக்க குணம் கொண்ட கதாபாத்திரமான லியோ வெளியே வரும். அதேபோல் மிகவும் அன்பான பண்பான குரல் உயர்த்தி பேசாத குணநலன் கொண்ட ஒருவராக தளபதி விஜய் அவர்களை இத்தனை நாட்கள் பார்த்துவிட்டு திடீரென்று அரசியல் மாநாட்டு மேடையில் இவ்வளவு ஆக்ரோஷமாக தனது கொள்கைகளை தெள்ளத்தெளிவாக பேசி ஒரு பக்காவான அரசியல்வாதியை பார்க்கும்போது அவர் லியோவாக மாறிய தருணத்தை உணர்வதாக பலரும் சோசியல் மீடியாக்களில் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.