தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நரேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இங்குள்ள ரயில்வே நிலையத்தை ஒட்டி ஒரு ஆபத்தான புதைக்குழி உள்ளது. இதில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சுற்றிலும் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால் நரேஷ் அந்த தடுப்புகளை மீறி உள்ளே சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் புதைகுழிக்குள் விழுந்துள்ளார். இதில் அவரது நெஞ்சு பகுதி வரை மண்ணுக்குள் புதைந்தது. இந்நிலையில் புதைகுழி இருப்பதால் யாரும் அந்த பகுதிக்குள் செல்ல மாட்டார்கள்.

இருப்பினும் ரயில்வே தண்டவாளம் அருகே ரயில் டிராலி டிரைவர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கூச்சலிடுவதை கேட்டு அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒருவர் புதை குழியில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விளைந்து வந்த காவல்துறையினர் கயிறு கட்டி புதைகுழிக்குள் இருக்கும் வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட நரேஷ் மயக்க நிலையில் இருந்ததால் அவரை மருத்துவமனையில் அது அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.