தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தது. நேற்று மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதனை மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தற்போது அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளின் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாகவும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கால அவகாசம் மே 17ஆம் தேதி ஆகும். இதற்கான கட்டணம் 275 ஆகும். மேலும் இந்த விடைத்தாள் நகலை பெற்றதும் மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.