2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையை சேர்ந்த முருகன் காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும் மோதியது. இந்த விபத்தில் முருகன், மனைவி ரஞ்சிதா, மகா அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மகள் நித்திஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.