இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னணி வீரர் ஷிகர் தவான் தன்னுடைய மகன் சோராவர் பற்றி  உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனை நேரில் பார்க்க முடியாததால் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பதால், ஆஃபர்மேஷன் (affirmations) மூலம் மகனை தினமும் பேசி, அணைத்துக் கொள்கிறேன் என்று உணர்வதாக  கூறியுள்ளார். தவான், தனது மனைவி ஏஷா முகெர்ஜியுடன் 2023 அக்டோபரில் விவாகரத்து பெற்றார்,. ஆனால் அதில் மகன் சோராவரின் பாதுகாப்பு உரிமையை இழந்துவிட்டார். நீதிமன்றம் வீடியோ அழைப்புகள் மூலம் மகனை பார்க்கலாம் என அனுமதி அளித்திருந்தாலும், தற்போது அந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டுவிட்டதாம்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “ஒரு Single parent  ஆக இருக்கிறது கடினம், ஆனால் இதை எதிர்கொண்டு வாழ்வதற்கு நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். நான் மகனை கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், ஆன்மீக ரீதியாக தினமும் அவருடன் பேசுவதாக உணர்கிறேன். நினைவில் அவனுடன் விளையாடுகிறேன், பேசுகிறேன். என் துக்கம் எந்த பயனும் தராது. அதனால், என் மகன் திரும்ப வருவான் என்று நான் மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்கிறேன்” என்று  கூறியுள்ளார். இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்களில் இந்திய அணிக்காக மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த தவான், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு  பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.