தேர்தல் ஆணைய நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1100 சுங்கச்சாவடிகளில் மூன்று முதல் ஐந்து சதவீதம் கட்டண உயர்வு நேற்று அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதனை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஜூன் நான்காம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.