சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். மேலும் இவர் பிக் பாஸிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் தன்னுடைய கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டின் நீண்ட நாட்களாக உள்ளே இருந்து வெளியே வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இவர் பிக் பாஸ் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளர்.
இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டரோடு கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ராபர்ட் மாஸ்டர் தனக்கு வெறும் நண்பர் மட்டுமே என்று கூறி அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். தற்போது ரச்சிதா ஒரு சீரியல் இயக்குனரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக குழந்தை தத்தெடுப்பது பற்றி பேசி இருந்தார் ரச்சிதா. இருப்பினும் இந்த இரண்டாவது திருமணம் பேச்சு எந்த அளவுக்கு உண்மையானது என்பது அவர் கூறினால்தான் தெரியவரும்.