அதிமுகவை ஊழலுக்குப் பட்டியலை வெளியிடுவீர்களா ? என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்… மாநிலத் தலைவராக இல்லை என்றால் பாஜகவில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு டென்ஷன் ஆன அண்ணாமலை, இந்த கேள்வியை கேட்ட செய்தியாளர்களை முன்னே வந்து நிற்க சொன்னார். கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கு. மக்கள் பார்க்கட்டும். யாரு இந்த மாதிரி கேள்வியை கேட்கிறார்கள் என தமிழக ஊடகம் பார்க்கணும்.

நீங்கள் தமிழகத்தில் தலைவரா ? இல்லை என்றால் பாஜகவில் இருப்பீர்களா என்று கேட்கிறீர்களே…  இந்த மாதிரி அறிவாளித்தனமான கேள்வியை கேட்பது யாரென்று எட்டு கோடி மக்களும் பார்க்கட்டும். நான் சொல்றதுல என்ன தப்பு இருக்கு. கேள்விக்கு ஒரு மரபு இருக்கின்றது.  அந்த மரபை தாண்டிட்டிங்கன்னா…  அண்ணாமலை யாராக இருந்தாலும் விடமாட்டான். நான் என்ன இந்த சீட்டில் பசை போட்டா உக்காந்து இருக்கேன்.

இன்னைக்கு நான் விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கும் என்னுடைய முதல் பணி விவசாயம். நான் அரசியல்வாதி இல்லையா ?  நான் முழுநேர அரசியல்வாதியா ? கிடையவே கிடையாது. நான் ஏன் முதல்ல அரசியல்வாதியா இருக்க போறேன் ? கிடையவே கிடையாது.  எதுக்கு முழு நேர அரசியல்வாதியாக இருக்கணும் ஊழல் செய்யவா ?

எந்த வேளையும் இல்லாம உன் வேலை என்னன்னு கேட்டா  அரசியல்வாதி… காலையில் இருந்து நைட் வரைக்கும் என்ன வேலை அரசியல்வாதி. 7 நாள் என்ன பண்ணுவ அரசியல்வாதி… 30 நாள் என்ன பண்ணுவ ? அரசியல்வாதி. இன்னைக்கு நான் விவசாயி தானே.  விவசாயி என்னுடைய அடையாளம்.  அதற்குப் பிறகுதான் அரசியல்வாதி என்கின்ற அடையாளம். அதற்குப் பிறகுதான் பிஜேபி என்கின்ற அடையாளம். விவசாயி என்ற அடையாளத்தில் தெளிவாக இருக்குறேன் என தெரிவித்தார்.