தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் கிட்ட DMK  பொய் பேசும்போது சொல்லணும்…. சமூக நீதி யாருங்க… சமூக நீதி காத்த ஒரே ஒரு காவலர் என்றால் ? பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அம்பேத்கர் அவர்கள் சொன்னது போல,  எப்ப பட்டியலின சகோதர – சகோதரிகளுக்கு  அரசியல் அங்கீகாரமும் பவரும் கிடைக்குமோ அன்னைக்கு தான் வாழ்க்கை மாறும்.

அதை கொடுத்தது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். முதல் முதலாக அரசியல் அங்கீகாரம்….. பட்டியலின சகோதர சகோதரிகள் கேபினெட்டில் முக்கியமான துறையில் இருக்கனும்,  முடிவெடுக்கணும். எல்லாருரையும் அரவணைத்து கேபினட்டில் 11 மூத்த அமைச்சர்கள் பட்டியலின சகோதர – சகோதரிகள் நம்முடைய கேபினட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் பணி செய்கிறார்கள். பிரதமர் அவர்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு….. பட்டியலின சகோதரர் ராம்நாத் கோவிந்த் அவர்களை இந்தியாவினுடைய ஜனாதிபதியாக அமர்த்தினர். பிரதமர் அவர்களுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் பழங்குடியின சகோதரி திரவுபதி முர்மு அவர்களை ஜனாதிபதி ஆக கொண்டு வந்து அமர்த்தினார். இது சமூக நீதியா ? இல்லை இவுங்க சொல்லுறது சமூக நீதியா ?

35 அமைச்சர்களில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அமைச்சரவையில் இரண்டு பேர் பட்டியல் இனத்திலிருந்து  வந்துருக்குறாங்க.. ரெண்டே ரெண்டு பேர்…. கேபினட் ஆர்டர்  பாத்திங்கன்னா…..  33,  34 கடைசியா ரெண்டு பேரை கொண்டு போய் வச்சிருக்காங்க….  உப்பு சப்பு இல்லாத துறையை கொடுத்திருக்கிறார்கள். இதை சமூகநீதி என்று பேசுறாங்க… இதை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்லணும்….  எல்லா மக்களிடம் இந்த பொலிட்டிக்கல் நரேட்டிவ்வை  எடுத்து உண்மையை சொல்லணும் என தெரிவித்தார்.