1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க மதுரை காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்தது. இந்நிலையில் இந்த தனிப்படையானது சிவகாசியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த பன்னீர்செல்வத்தை 27 வருடங்கள் கழித்து கைது செய்துள்ளது.