மேற்கு வங்கம் மாநிலத்தில் சமீபத்திய ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே வாரியம் புதிதாக 13,000 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த ஜனவரி மாதம் ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களிலும் மொத்தமாக 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அந்த எண்ணிக்கை 3.3 மடங்கு உயர்த்தி மொத்தமாக 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய சூழலில் புதிதாக ஆட்களை தேர்வு செய்து பல்வேறு நடைமுறைகளை முடித்து பணியில் அமர 6 மாதங்கள் ஆகும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.