ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.

இந்நிலையில்  ஒடிசாவின் பாலாசோரில் நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து 18 நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12837 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12863 ஹவுரா-பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12839 ஹவுரா-சென்னை மெயில், 12895 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 20831 ஹவுரா-சம்பல்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பேரிடர் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை வழங்க, திஷா சர்க்கார் 06782-262286 என்ற உதவி எண்ணை ஏற்பாடு செய்துள்ளார். ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 044- 25330952 (சென்னை).