நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த  படத்தின் புரோமோஷன்கள், முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி, கடந்த 2 வாரமாக ஜெயிலர் படம் சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், ஜெயிலர், லால் சலாம் படங்களுக்கு பிறகு நடிகர் ரஜினி தனது 170வது படத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார். அதேசமயம் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக, நடிகர் நானி நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்