
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த மாணவி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் 9-ம் தேதி சிறுமியை அவருடைய தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மதியரசன் என்ற 20 வயது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் மதியரசனை தேடி வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு இப்போது தான் அவர் சிக்கியுள்ளார். மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.