ஜப்பானில் குதிரை காய்ச்சல் பரவி வருகிறது. அந்த நாட்டில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை காய்ச்சல் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மூன்று குதிரை வளர்ப்பு பண்ணைகளில் உள்ள குதிரைகளுக்கு ஈக்குவின் இன்புளுவன்சா என்னும் கொடிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குதிரையின் சுவாசக் காற்றின் மூலமாக வைரஸ் மற்ற குதிரைகளுக்கு பரவி 7 முதல் 10 நாட்கள் வரை அதன் பாதிப்பு தொடரும் என கூறப்படுகிறது. தற்போது அந்த குதிரைகளை தனிமைப்படுத்தி தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு ஜப்பான், சீனா, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளில் குதிரை காய்ச்சல் பரவியது. இதனால் லட்சக்கணக்கான குதிரைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.