உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜெகதீஷ் மண்டப் பகுதி அருகே டெல்லி சாலை உள்ளது. இங்கு ஒரு பழமையான மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1857 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 168 வருடங்கள் பழமையானதாகும். இந்த பகுதியில் மெட்ரோ ரயில்வே தடம் அமைக்கப்பட இருந்த நிலையில் அதற்கு அந்த மசூதி தடையாக இருந்தது. இதன் காரணமாக அதனை இடிக்க உத்தரவிட்டனர்.

ஆனால் அந்த பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததால் மசூதியை இடித்தால் பிரச்சனை வரும் என்பதற்காக அதிகாரிகள் அதனை இடிக்கவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மசூதியில் முதல் தொழுகை நடந்து முடிந்த பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் மசூதியை இடித்தனர். மேலும் அந்த பகுதியில் புதிய மசூதி கட்டுவதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.