
குஜராத் மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்து விட்டான். அதாவது பிப்லியா என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமித் மினா என்ற சிறுவன் நேற்று மாலை 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். இது தொடர்பாக தகவல் தெரிந்த மீட்பு குழுவினர் அங்கு வந்து கிட்டத்தட்ட 16 மணி நேரமாக சிறுவனை மீட்க போராடினர்.
அந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.