ராஜஸ்தான் மாநிலம் உதம்பூர் மாவட்டம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவர ராம் கல்பெலியா என்பவரின் மனைவி ரேகா (வயது 55), ஏற்கனவே 16 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், தற்போது 17வது குழந்தையை பிரசவித்துள்ளார்.
பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் கவர ராம் – ரேகா தம்பதியருக்கு இதுவரை பிறந்த 16 பிள்ளைகளில் 6 பேர் (ஒரு பெண் குழந்தை உட்பட) பிறந்தவுடனேயே உயிரிழந்தனர். எஞ்சிய 11 பிள்ளைகளுடன் குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது ரேகா மீண்டும் கர்ப்பம் அடைந்து, சுமார் 55 வயதில் 17வது குழந்தையை பெற்றெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மருத்துவமனையில் சேரும் போதே இது தனது 4வது குழந்தை என பொய்யாக கூறிய ரேகாவுக்கு பிரசவம் முடிந்த பின் தான், இது 17வது குழந்தை என மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியவந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக தகவல் வந்துள்ளதாலும், தொடர்ச்சியான கர்ப்பங்களால் ரேகாவின் உடல் நிலை மிக மோசமாகி உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்தத் தம்பதியர் பிறந்த பிள்ளைகளில் யாரையும் பள்ளிக்குச் சேர்க்கவில்லை என்பதும், அவர்களில் 5 பேருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதும், அவர்களுக்கும் பிள்ளைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
