ஜப்பானில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் டோக்கியோ தெருவில் படம்பிடித்த ஒரு சிறு காணொளி, பொது ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் குறித்த புதிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது. டோக்கியோ வீதியில் உணவகம் ஒன்றின் வாசலில் யாரோ வாந்தி எடுத்திருந்த நிலையில், அந்த உணவக ஊழியர் எந்தவித முன்கூட்டிய தயக்கமும் இன்றி தனது வெறும் கைகளாலேயே அந்த அசுத்தத்தை அகற்றி சுத்தம் செய்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்தச் செயலுக்காக அந்த ஊழியர் யாரிடமும் கவனத்தையோ அல்லது பாராட்டையோ எதிர்பார்க்காமல், தனது கடமையை அமைதியாக முடித்துவிட்டு மீண்டும் உணவகத்திற்குள் சென்றார். ஜப்பானியத் தெருக்கள் ஏன் இவ்வளவு தூய்மையாக இருக்கின்றன என்பதற்கு இத்தகைய பொறுப்புணர்வே காரணம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது தனிப்பட்ட நபரின் கடமை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.
