குழந்தைப் பருவத்தில், நாம் பென்சிலின் பின்னால் பொம்மை மாட்டி, “ஜீபூம்பா பென்சில்” என்று கற்பனை செய்து, நாம் வரைவது எல்லாம் நிஜமாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்போம். ஆனால், அப்போது அது வெறும் கற்பனையாகவே இருந்தது. இப்போது, தொழில்நுட்பத்தின் மூலம் இந்தக் கற்பனை ஓரளவு நிஜமாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில், ஒரு பெண் வரைந்த படத்தை ஒரு இயந்திரத்திடம் கொடுக்கிறார், அது அந்தப் படத்தை உருவமாக உயிர்ப்பிக்கிறது. இது குழந்தைகளின் கற்பனையை நிஜமாக்குவது போல் தோன்றுகிறது.
அந்தக் காணொளியில், முதலில் ஒரு மான் உருவத்தை வரைந்து இயந்திரத்திடம் கொடுக்க, அது ஒரு மானை கொண்டு வருகிறது. பின்னர், யானை உருவத்தை வரைந்து கொடுக்கும்போது, யானையும் அதேபோல் உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்த அற்புதமான தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
