
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். இவர் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைந்ததும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்ததால் திருமணம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற பட நிகழ்ச்சியின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதாவது நடிகை சாய் தன்ஷிகா 15 வருடங்களாக தானும் விஷாலும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கியதாகவும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி எங்களுக்குள் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் அறிவித்தார்.
விஷால் ஒரு நல்ல மனிதர் என்று பாராட்டிய அவர் தனக்காக பல இடங்களில் குரல் கொடுத்துள்ளார் என்றும் அவர் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஷால் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதில் சாய் தன்ஷிகா தமிழில் பேராண்மை, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் நடிகர் விஷாலுக்கு 47 வயது ஆகும் நிலையில் சாய் தன்ஷிகாவுக்கு 35 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.