
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாது, மேல்நிலவுர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மற்றும் ராமராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மூவரும் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வந்ததாவும் , ஒரு துப்பாக்கியை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்ததகவும் தெரிந்தது .
பின்பு மூவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.