
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது ஆத்தூர் வட்டார போக்குவரத்து துறையினர் காரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கபடி பயிற்சியாளர் காரை ஓட்டு வந்ததும், இவர்கள் ஆத்தூரில் நடைபெற்ற கபடி விளையாட்டில் வெற்றி பெற்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்ததும் தெரியவந்தது. 15 மாணவிகள் ஒரு காரில் இருக்க இடமில்லாமல் காரின் இருக்கைகளை அகற்றிவிட்டு பின்பு அதில் மாணவிகளை உட்கார வைத்து அழைத்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காரை பறிமுதல் செய்து கார் ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.