உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை உலுக்கியெடுத்த பிரபல ‘நீல டிரம் கொலை வழக்கு’ வழக்கில் முக்கியக் குற்றவாளியான முஸ்கான் என்பவன் மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தனக்குக் கடுமையான தண்டனை கிடைத்துவிடுமோ என்ற பயத்தில் சிறைக்குள் அவர் தீவிர ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது. நீதிமன்ற விசாரணை சூடுபிடித்துள்ளதால் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, முஸ்கான் தினமும் காலை மற்றும் மாலையில் வழக்கமாக சுந்தரகாண்ட பாராயணம் செய்து வருவதாகச் சிறைத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் தனது மகளின் பெயரைக் கூட ‘ராதா’ என்பதில் இருந்து ‘மன்னத்’  என்று முஸ்கான் மாற்றியுள்ளான். கடவுளிடம் தான் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மற்றும் மனமுருகித் செய்யும் வேண்டுதலின் அடையாளமாகவே இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சிறிய பச்சிளம் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதால், சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போல எந்தவொரு வழக்கமான பணிகளுக்கும் முஸ்கான் அனுப்பப்படாமல், முழுக்க முழுக்கக் குழந்தையின் பராமரிப்பிலேயே தனது நேரத்தைக் கழித்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட நாள்களில் இருந்து இன்று வரை முஸ்கானைச் சந்திப்பதற்காக அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் சிறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனது மகளுடன் மட்டுமே சிறை நாள்களைக் கழித்து வரும் அவரது தற்போதைய தினசரி வாழ்க்கை முறை, கடவுளுக்குப் பூஜை செய்வது, சுந்தரகாண்டம் வாசிப்பது மற்றும் குழந்தையின் பராமரிப்பு என்றே சுருங்கிப் போய்விட்டது. இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சாஹிலின் சகோதரர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விசாரணை மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மீரட் படுகொலை வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முஸ்கான் சிறைக்குள் மேற்கொண்டு வரும் ஆன்மீக வழிபாடுகளும்,  தினசரி நடவடிக்கைகளும் தற்போது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

மேலும் தன்னுடைய கணவனை 15 துண்டுகளாக கூறு போட்டு நீலநீர டிரம்பில் சிமெண்ட் பூசி கள்ள காதலுக்காக முஸ்கான் கொடூரமாக கொலை செய்த நிலையில் இந்த உண்மையை அவரது மகள் தான் சொன்னது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அது கணவனின் குடும்பத்தினர் பராமரிப்பில் இருக்கும் நிலையில் கள்ளக்காதலால் சிறையில் இருக்கும் போது இன்னொரு மகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.