
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஹைதராபாத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் விவசாயம் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்றும் ஜி 20 அமைப்பின் ஒரு பகுதியாக விவசாயம் தொடர்பாக இதுவரை மூன்று பணி குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் ஒன்பது நாடுகளின் விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகின்றது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளன.