கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் 224 தொகுதிகளில், காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரபல கன்னட டிஜிட்டல் ஊடகமான ஈதினா டாட் காம் நடத்திய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த தேர்தலில் வெறும் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தில் காங்கிரசுக்கு 43%, பாஜகவுக்கு 33% வாக்குகளே கிடைக்குமாம்.