பீகார் மாநிலத்தில் கோலா இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது 14 வயதான வைபவ் சூர்யவன்சியை பாராட்டினார். இது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது, ஐபிஎல் விளையாட்டு போட்டியை பார்த்தேன். அப்போது பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி மிக சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு இருக்கிறது. அவர் தன்னுடைய திறமையை வெளிக் கொண்டு வருவதற்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக பிரகாசிப்பீர்கள்.

நீங்கள் முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். புதிய கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கையில் விளையாட்டை ஒரு பகுதியாகவே மாற்றியுள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களையும் உருவாக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்று கூறினார். மேலும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் தற்போது ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் குஜராத்துக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்து  அசத்தினார்.