
அமெரிக்காவின் கேன்டக்கி மாநில பூன் கவுண்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், 13 வயது மகளின் அறையில் 20 வயது இளைஞர் ஒருவர் நிர்வாணமாக இருந்ததை கண்ட தந்தை ஒருவர், அவரது மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி அதிகாலை, வீட்டு கதவு திறந்திருப்பதை கவனித்த தந்தை, மகளின் அறையில் சென்று பார்வையிட, லூயிஸ்விலிலிருந்து வந்த பாற்கர் கிராமர் (20) என்பவர் அவரது மகளின் படுக்கையின் அருகே நிர்வாணமாக இருந்தார்.
இதைபார்த்த தந்தை உடனடியாக போலீசுக்கு அழைப்பேன் என எச்சரித்ததும், கிராமர் தப்பிக்க முயன்று அவரை தள்ளி விட்டு வெளியே ஓடியுள்ளார். இதையடுத்து தந்தை வீட்டின் முன்புறத்தில் மூன்று முறை நிலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை நிறுத்த முயன்றார்.
போலீசார் அதிவேகமாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிராமரின் வாகனம் அருகிலிருந்ததாகவும், அவரது புகைப்படம் மற்றும் சான்றுகளால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிறுமியின் அறையில் கிடைத்த ஆதாரங்கள் மூலம் கிராமரின் தொடர்பு உறுதியாகியுள்ளது.
விசாரணையின் போது, கிராமர் 145 கிமீ தொலைவில் உள்ள லூயிஸ்விலிலிருந்து சிறுமியை சந்திக்க வந்தது, அவரை பாலியல் வன்கொடுமை செய்தது போன்றவற்றை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர்மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ரூ.2 கோடி ஜாமீனில் பூன் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரின் வழக்கு மே 5ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.