
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தினேஷ் குமார் வயது 25 என்பது தெரிய வந்தது.
இவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்து கலெக்டரிடம் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஒப்புக்கொண்டார். மேலும் அதன்படி தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.