திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பின்னர் சிறுமியிடம் விசாரிக்கப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நாகராஜன் என்பவர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவர் சிறுமி பள்ளிக்கு சென்று வரும் பேருந்தில் ‌ உதவியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் வயது 62 ஆகிறது. இவரை தற்போது காவல்துறையினர் போகசோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.