நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தில் சுமார் 2 லட்சம் பேர் காணாமல் போய் உள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்திலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 10 புள்ளி 61 லட்சம் பேரும், சிறுமிகள் 2.51 லட்சம் பேரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 57 ஆயிரத்து 918 பெண்கள் மாயமாகியுள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.