மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜோலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்த இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து நையாண்டி மற்றும் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகிய நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நஸ்ரியா, நானும் பகத் பாசிலும் ஒரு திரைப்படத்தில் இணைந்து வேலை செய்தோம். அப்போது எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. உடனே என்னுடைய காதலை வெளிப்படுத்தி நான் உங்களை ஒரு குழந்தை போல கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறியதும் அவர் ஏற்றுக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக்கு ஏற்றவர் இவர்தான். அதனால்தான் இவரை திருமணம் செய்து கொண்டேன் என்று நஸ்ரியா கூறியுள்ளார்.