
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரு மாணவி 12-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பொது தேர்வு எழுத சென்றார். மாணவி தேர்வு எழுதிய அறையின் கண்காணிப்பாளராக ரமேஷ் என்பவர் இருந்தார். இவர் முதுகலை ஆசிரியராக இருக்கும் நிலையில் தேர்வு எழுதும் போது மாணவியின் மார்பில் கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி தேர்வை சரிவர எழுத முடியாமல் அழுது கொண்டே இருந்தார். தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பிறகும் மாணவி அழுது கொண்டே இருந்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியிடம் கேட்க அப்போது நடந்த விபரங்களை கூறியுள்ளார்.
பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்அந்த விசாரணையில் ரமேஷ் மீதான குற்றம் உண்மை என தெரிய வந்ததால் தற்போது அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சமீப காலமாக தமிழகத்தில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்வு அறையில் வைத்து ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.