டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவன், தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மொபைல் கேம்களில் நேரம் செலவிட்டதால், முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். இது மட்டுமல்லாமல், சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் இழந்ததால், அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது முதுகெலும்பில் கடுமையான சிதைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

இதனைக் கருத்தில் கொண்டு, ஸ்க்ரூ பொருத்தும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில நாட்களுக்குள் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், பிசியோதெரபி மற்றும் மனநல ஆலோசனை சிகிச்சை அவசியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்தம், மூளை ஓய்வின்மை, கண் பார்வை குறைபாடு போன்ற விளைவுகளை மொபைல் கேம் உருவாக்கும் என்பதையும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் கேம்களில் மூழ்கி வாழ்கின்ற சூழ்நிலையில், பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும். மொபைல் பயன்பாட்டில் கட்டுப்பாடு தேவை என்பதை இந்த சம்பவம் நடத்தியுள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.