நாடு முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பாக பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்களின் ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஏற்படும் நிதி தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். இந்நிலையில் பெண்களுக்கான சிறந்த ஐந்து ஓய்வூதிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ULIP திட்டம்பெண்களுக்கு சிறந்த முதலீடு திட்டம். இதில் ஆயுள் காப்பீடு முதலீட்டு வசதி உள்ளது. இந்த திட்டம் முதிர்வுக்குப் பிறகு வழக்கமான ஓய்வூதியத்தின் பலன் கிடைக்கும். மியூச்சுவல் பண்ட் திட்டம் மூலமாக அதிகமான வருமானம் கிடைக்கும். மேலும் SIP இன் கீழ் மாதாந்திர பிரிமியமும் கிடைக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் வருமானம் அதிகமாக இல்லாதவர்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். இதன் மூலம் 18 வயது வரை 10 வயது வரை இருப்பவர்கள் பலன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 60 வயது எட்டிய பிறகு ஆயிரம் முதல் 5000 வரை ஓய்வூதியம் பெறலாம். தேசிய ஓய்வூதிய திட்டம் பெண்களுக்கு  சிறந்த ஓய்வூதிய திட்டம். இதில் முதலீடு மற்றும் வயது அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த பாலிசியை 30 வயதில் வாங்க முடியும். இதில் குறைந்தபட்ச பலன்கள் ஒரு லட்சம். அதேபோல அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவும் கிடையாது.