
சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்ற போராடி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பஞ்சம், வரட்சி காரணமாக கடுமையான சவால்களை எதிர் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் சூடானில் இருக்கும் சிறுமிகள் இளம் பெண்களை போராளி குழுக்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆயுதம் ஏந்தி வீட்டிற்குள் நுழையும் போராளி குழுக்கள் 11 முதல் 18 வயது வரை இருக்கும் சிறுமிகளை கடத்தி செல்கின்றனர்.
அந்த சிறுமிகளை தினமும் சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். சிறுமிகள் சாப்பிடுவதற்கு சோள மாவு மற்றும் நீர் மட்டுமே உணவாக கொடுக்கப்படுகிறது. அவர்களது கொடூர செயலால் பல சிறுமிகள் கர்ப்பமாகவும் இருக்கின்றனர். ஒரு சில நேரம் கூட்டு பாலில் பலாத்காரம் செய்வதால் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமிகளும், இளம்பெண்களும் துயரத்தை அனுபவிக்கின்றனர். ஒரு சில சிறுமிகள் போராளிகள் குழுவில் இருக்கும் நல்ல நபர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர். சர்வதேச அளவில் பதற்றம் நிறைந்த, பாதுகாப்பு இல்லாத, கவலைக்கிடமான நாடுகள் பட்டியலில் சூடான் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது வருத்தம் அளிக்கிறது.