சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இரவு நேரத்தில் பெற்றோருடன் உறங்கிய குழந்தை திடீரென எழுந்து வெளியே வந்து பக்கெட் தண்ணீரில் கவிழ்ந்த நிலையில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.