INDO – TIBET படையில் காவலர் நிலை (டெய்லர் மற்றும் காப்லர்) ஆகிய பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 நாளை மறுநாள் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்களுக்கு 44 மற்றும் பெண்களுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதிவு கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 18 நாளை மறுநாள் உடன் முடிவடைகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.itbpolice.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.