
உத்தரகாண்ட் மாநில கேபினட் அமைச்சர் சந்தன் ராம்தாஸ் (65) இன்று காலமானார். அவர் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புதன்கிழமை ராம்தாஸின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சரின் மறைவைத் தொடர்ந்து மாநில அரசு ஏப்ரல் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.