தமிழ்நாட்டு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு ரகசியமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு-தனியார் பள்ளிகளில் படிக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 10, +2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் +2 மாணவர்களின் சுய விவரங்களுக்கு ரூ.5,000, 10th மாணவர்களின் விவரங்களுக்கு ரூ.3,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.