
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் ரிக்டர் அளவு 7.7 மற்றும் 6.4 என பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இடிப்பாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் பத்தாயத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தலாம் என்று அமெரிக்கா ஆய்வு மையமான யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.இன்று மதியம் 2:50 மணியளவில் ரிக்டர் அளவில் 4.7 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.