குஜராத்தில் பிரசாந்த் பட்டேல் என்ற இளைஞர் பீட்சா மற்றும் குளிர்பானத்திற்கு 665 ரூபாய் கட்டணம் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது கணக்கிற்கேற்ப, ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்பட்ட பிறகு, 664.76 ரூபாய் மட்டுமே வர வேண்டும் என்பதால், 24 பைசா கூடுதல் கட்டணம் ஏன் வசூலிக்கப்படுகிறதென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடை ஊழியர்கள், கட்டணம் ரவுண்ட் செய்யப்பட்டதாக கூறினாலும், பிரசாந்த் அதை ஏற்க மறுத்தார். கூடுதலாக 24 பைசாவை திரும்ப பெற வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். ஆனாலும் கடை உரிமையாளர் அதை வழங்க மறுத்ததால், பிரசாந்த் காந்தி நகரில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பாணையில் மனுத்தாக்கல் செய்தார். அவர், கட்டணத்தை ரவுண்ட் செய்வதற்காக அதிகபட்சமாக பணம் வசூலிப்பதற்கான கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறினார்.

இந்த விவகாரத்தில், கடை உரிமையாளர் அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கட்டணம் ரவுண்ட் செய்யப்படுவதாகவும், பில்லிங் சாப்ட்வேர் இவ்வாறு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இரண்டு தரப்புகளின் வாதங்களை கேட்ட பிறகு, நுகர்வோர் தீர்ப்பாய கமிஷனர், 24 பைசாவுக்காக மனுத்தாக்கல் செய்வது நீதித்துறையை கேலி செய்வதாகவும், இதற்காக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார்.